I am happy to reproduce an Article from a Tamizh Magazine Thamizhini June 2010 (www.tamizhini.com) Author: Elango Kallaanai: World should know how Indian General Elections 2009 was 100% rigged: I shall be posting the English version of the same soon. I am keen this article is also posted in Hindi considering the upcoming elections in UP.
Elango has done a great job of highlighting the EVM faults and citizens of India have the right to know how they are being fooled. World’s largest democracy is ruled by the biggest crooks the world has witnessed. Please note the article was published in 2010 when 2G scam was yet to hit the headlines and Raja continued to be Cabinet Member of UPA2.
I have also added some images from http://indiaevm.org/media.html who have been responsible in highlighting the EVM frauds and recommend readers to visit the site mentioned. – Jayaraman Rajah Iyer
மைக்ரோ சிப்புக்குள் மக்களாட்சித் தத்துவம்
ஆசிரியர் – இளங்கோ கல்லானை
(தமிழினி ஜூன் 2010)
நமது வங்கிக் கடன் அட்டையை கண்ணில் பார்க்காத ஒருவர் பணத்தை எடுத்து விடுகிறார் என்பதைப் பற்றி தினமும் செய்தித் தாளில் பார்க்கிறோம். நான் ஒரு பள்ளியில் ஆசிரியராக இருந்த பொழுது என்னுடைய மின்னஞ்சல் முகவரியை 13 வயது மாணவனிடம் கொடுத்தேன். அவன் மூன்றே படிகளில் என்னுடய ரகசிய குறியீட்டு வார்த்தையை கண்டுபிடுத்துவிட்டான். அவனுக்கு அது மனிதனின் மூளை எந்திரத்தை விட வலியது என்று நிரூபிக்க தேவையான சாகச விளையாட்டு மட்டுமே. இது போல தினமும் கைதாகும் இளம் இணையத்தள குற்றவாளிகள் எல்லோருமே பாதுகாப்பு வளையங்களை உடைக்கும் சில தந்திரங்களை கற்று வைத்துள்ளனர். இன்று பெரிய ஊழல்கள் யாவும் பல லட்சம் கோடிகளில் இருப்பதின் பின்னணியில் இந்த தகவல் தொழில் நுட்ப பயன் பாட்டின் அடிப்படைக் கோளாறுகளே. அதுவும் spectrum அல்லது இரண்டாம் வரிசை காற்றலை கதை உலகம் அறிந்ததே. இதை இன்று தி ஹிந்து போன்ற நடுநிலை நாளேடுகள் என்ன துவம்சம் செய்துள்ளன என்றும் எல்லோருக்கும் தெரியும். IPL மோசடிகளில் தகவல் தொழில் நுட்பத்தின் பங்கு பற்றித் தான் இப்பொழுது உள்ள விவாதமே. கருப்பை வெள்ளையாக்கும் தொழில் நுட்பம்.இப்பொழுது பிரபலமாகி வரும் தகவல் தொழில்நுட்ப குற்றங்கள் பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம்.
தகவல் தொழில் நுட்பக் கம்பெனிகள் பலவும் பாதுகாப்பு உத்தரவாதத்துக்கு செலவழிக்கும் பணம் உண்மையான மென் பொருள் தயாரிப்பு செலவை விட அதிகம். தகவல் தொழில் நுட்பத்தின் சுவர்கள் மிகவும் மெலிதாகத்தான் உள்ளது. திருட்டு என்பது அன்றாட நிகழ்வு. இதிலே எல்லோரும் பாதுகாப்பு வளையத்தை உடைக்கும் திறனாளியை பாராட்டாமல் இருக்க மாட்டார்கள். பல கம்பனிகள் வைரஸ் உற்பத்தி மற்றும் விற்பனையில் கை தேர்ந்தவை. இப்படி இயங்கவில்லையென்றால் இந்தத் துறையில் சமீபத்தைய கண்டுபிடிப்பு அல்லது புதிய தொழில் நுட்பம் என்ற வணிக விளையாட்டை வெற்றிகரமாக விளையாட முடியாது.
நமது தேர்தல் ஆணையம் மின்னணு வாக்கு யந்திரங்களை பயன்படுத்த ஆயத்தமான பொழுது சுஜாதா போன்ற வடிவமைப்பாளர்களின் நோக்கம் சந்தேகத்துக்கு இடமில்லாதது. ஆனால் அரசியல் என்பது முற்றிலும் வேறு விளையாட்டு என்பது எல்லோருக்கும் தெரியும். எந்தச் சூழ்நிலையிலும் மக்களுக்கு எதிரான பல்வேறு வணிக சக்திகள் மத சக்திகள் அரசியல் சக்திகள் மற்றும் அறிவாளிகள் வேறு விதமான மாற்றுத் திட்டம் வைத்து இருப்பார்கள்.நமது மக்களோ அரசு ஊழியர்களோ அவ்வளவு தொழில் நுட்பம் தெரியாதவர்கள். அவர்களுக்கு அந்நியமான தகவல் தொழில் நுட்பத்தை அவர்கள் மேல் ஏன் திணிக்க வேண்டும்? இதில் பல குளறுபடிகள் உள்ளதாக பலரும் புகாரளித்தும் கண்டுகொள்ளவில்லை தேர்தல் கமிசன். வாக்கு யந்திரங்களை மோசடி செய்ய முடியுமா என்று எல்லோரிடமும் கேட்டால் அது பற்றித் தெரியாது என்று தான் பதில் சொல்லுவார்கள். உறுதியான ஆதாரங்களுடன் இப்பொழுது தான் இது பற்றிப் பேச ஆரம்பித்துள்ளன சில அமைப்புகள். இந்த புயலில் இப்பொழுது சிக்கியுள்ளது மின்னணு வாக்கு யந்திர மோசடிகள்.
கருத்துச் சுதந்திரம்
ராஜ் நீதி என்ற ஒரு ஹிந்தித் திரைப்படம் வரவுள்ளது. இதில் மின்னணு வாக்கு யந்திரங்களை முறைகேடாக பயன்படுத்தும் ஒரு அரசில்யல்வாதியைப் பற்றி கதை வருகிறது. அந்தக் காட்சி நேரடியாக சோனியா காந்தியை குறித்ததாக உள்ளது என்று ஆட்சேபம் எழுப்பப்பட்டு அந்தக் காட்சிகள் நீக்கிய பின் அந்தத் திரைப்படம் திரைக்கு வருகிறது. 2010 மே மாதத்தில் 25 ஆம் தேதி மும்பையில் இருந்து வெளி வந்த அனைத்து சினிமா செய்திகளிலும் இது வெளி வந்துள்ளது. இவ்வளவு தீவிரமாக தணிக்கைக்குழு தேர்தல் கமிசன் சார்பில் செயல்பட வேண்டிய அவசியம் என்ன? பதவியில் தொடரவா? இல்லை பயமா ? யாமறியோமே ? இந்தக் கருத்து விவாத்தத்துக்கு உட்படுத்த முடியாத அளவுக்கு முட்டுக்கட்டை போடும் சக்தி தேர்தல் கமிசனுக்கு மட்டும் என்று நம்ப முடிய வில்லை. எங்கிருந்து உத்தரவுகள் வருகின்றன என்று தெளிவாக விளங்க வில்லை.நம் தமிழ் திரை உலகில் கூட தருமபுரி பஸ் எரிப்பை காட்டிய கல்லூரி என்ற திரைப்படம் ஆந்திராவில் நடைபெறும் காட்சியாக காட்டப்பட்டு கற்பனைச் சம்பவம் என்றே பெயர் போடப்பட்டது. இந்தப் படம் அடிக்கடி தி. மு. க. பிரச்சாரத்திற்கு பயன்படுத்துகிறது. அ. தி மு க தினகரன் சம்பவம் படமாக்கப்படும் வரை பொறுக்க வேண்டும். இந்த அளவில் இருக்கிறது கருத்துச் சுதந்திரம். இனிமேல் ஊடகங்கள் எதைக் காட்ட வேண்டும் என்று அறிவுறுதப்படுகிரார்களோ அதைத்தான் காட்ட முடியும்.இது நெருக்கடி நிலை தானோ என்ற அச்சம் எழாமல் இல்லை.
இதுவரை வாக்கு யந்திரங்களை பற்றி வந்த அனைத்து புகார்களையும் தட்டி மழுப்பி பேசி வந்துள்ளது தேர்தல் ஆணையம். பின் வரும் பகுதிகளில் இது பற்றி விளக்கமாக பார்ப்போம். தேர்தல் கமிசன் மின்னணு வாக்கு யந்திரங்களை தாங்கிப் பிடித்துப் பேச வேண்டிய அவசியம் இல்லை தான். ஏன் அவர்கள் தன்மானப் பிரச்சனையாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதுவுமல்லாமல் இங்கே உள்ள கோளாறுகளை மற்றும் பாதுகாப்புக் குறைகளை பற்றிப் பேசும் போது ஏன் அது அவர்களுடைய அகந்தயைச் சுடுகிறது என்று தான் புரியவில்லை.
மூன்று விதமான பிரச்சனைகள் நம் முன் உள்ளது. ஒன்று தேர்தல் நடத்தும் வழி முறை சார்ந்த பிரச்சனை, இரண்டு தகவல் தொழில் நுட்பம் சார்ந்த பிரச்சனை, மூன்று தேர்தல் சரியாகத் தான் நடைபெறுகிறதா என்று உறுதிப் படுத்தும் பிரச்சனை.வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு ஒரு முறை கூட மறு ஆய்வு செய்யப் படாத இந்த மின்னணு யந்திரங்கள் எப்படி பட்டவை?
மின்னணு வாக்கு யந்திரங்களில் மூன்று வகை உள்ளது. முதல்த் தலை முறை வாக்கு யந்திரங்கள் 1989 இல் அறிமுகப் படுத்தப் பட்டவ. இரண்டாம் தலை முறை யந்திரங்கள் 2003 வாக்கில் அறிமுகப் படுத்தப் பட்டவை. 2006 இல் மூன்றாம் தலை முறை யந்திரங்கள் அறிமுகமாயின. இதில் இன்னும் பல தேர்தல்களில் முதலாம் தலை முறை யந்திரங்களை பயன் படுத்துகிறது தேர்தல் கமிசன். அந்த தொழில் நுட்பம் தோல்வி அடைந்ததது என்று தகவல் தொழில் நுட்ப மறு ஆய்வுக்கு அம்மைக்கப் பட்ட இந்திரேசன் கமிட்டி அறிக்கையே தெளிவாக சொல்லிவிட்டது. 13 லட்சம் யந்திரங்கள் கடந்த 2009 தேர்தலில் பயன் படுத்தப் பட்டன அவற்றில் வெறும் 4 லட்சம் யந்திரங்கள் மட்டுமே இரண்டாம் தலைமுறை யந்திரங்களுக்கு மாற்றப் பட்டன. மீதம் உள்ள ஒன்பது லட்சத்தி சொச்சம் யந்திரங்கள் அப்படியே பழைய பாதுகாப்பற்ற யந்திரங்களில் வாக்களிக்க வைக்கப்பட்டோம். இந்த சிரத்தயின்மை அல்லது தெளிவான அரசியல் நிலைப்பாடு என்பது பற்றி என்னெவென்று சொல்வது!
1998இல் சென்னை கிறிஸ்துவக் கல்லூரிக்கு முன்னாள் தேர்தல் ஆணையாளர் T.N.சேஷன் கல்லூரியின் முன்னாள் மாணவராக ஒரு விழாவிற்கு அழைக்கப் பட்டிருந்தார். பல இந்திய ஆட்சிப் பணியாளர்களை உருவாக்கிய சென்னை கிறிஸ்துவக் கல்லூரியின் சுய புராணம் ஒரு புறம் என்றால், T.N.சேஷன் சுய புராணம் சொல்லி மாளாது. முதல் வார்த்தை ‘நான்‘ என்றால் முடிக்கும் வார்த்தையும் ‘நான்‘ தான். வாக்கியத்தில் பொருள் எது வினை எது என்றெல்லாம் கண்டுபிடித்து விட முடியாது. நிறைய பேசினார். அதாவது பீஹார் போன்ற ஒரு காட்டு மிராண்டிகளின் கூடாரத்தில் எப்படி வெற்றிக் கொடி நாட்டினார் என்றும், தேர்தல் சீர் திருத்தம் என்பதை எப்படி வெற்றிகரமாக செய்து முடித்து தாயகம் திரும்பியுள்ளார் என்றும் தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்தார். அடுத்து அவரின் அரைக் கூவல். படித்தவர்கள் எல்லாம் அரசியலில் நுழைய வேண்டும். அப்பொழுது தான் லாலு போன்ற கிரிமினல்களிடம், படிக்காத ஜாதிய அரசியல்வாதிகளிடம் இருந்து தேசத்தைக் காக்க முடியும் என்று கூறிக் கொண்டிருந்தார். கூட்டத்தின் முடிவில் மாணவர்களுக்கு கேள்வி நேரம் ஒதுக்கப் பட்டது. மாணவர்கள் கேள்வி கேட்டால் பாலகாட்டுக்காரருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது. இந்த தேர்தல் கமிசன் எப்படி கேள்விகளுக்குப் பதில் அளிக்கும் என்ற பாணியை நான் நேரில் கண்ட சம்பவம்.
அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகள் மூன்று.
1. பெருந்துறை மற்றும் மயிலாப்பூர் இடைத் தேர்தல்களை ஏன் நிறுத்தி வைக்கவில்லை? ( ஆளுங் கட்சியாக 1994 இல் இருந்த அ.தி. மு. க. வாக்காளர்களுக்கு லட்டுக்குள் மூக்குத்தி வைத்துக் கொடுக்கும் புதிய இடைத் தேர்தல் யுத்தியை அறிமுகப்படுத்தியது).
2. பீஹார் போன்ற மாநிலங்களில் வாக்காளர்களுக்கு நம்பிக்கையளிக்க என்ன நடவடிக்கை எடுக்கப் பட்டது? ( கோபம் தான் பதிலாகக் கிடைத்தது)
3. இங்கே மருத்துவர்களுக்கு படித்தவர்கள் தானே ஜாதிக் கட்சிகளின் தலைவர்களாக உள்ளனர்? படிக்காத எம். ஜி. யார் மற்றும் காமராஜுக்கு அந்த முத்திரை இல்லையே?
அவ்வளவு தான். பொரிந்து தள்ளினார். ” உங்களைப் போன்ற ஏதும் அறியாதவர்களை நம்பி இந்த தேசம் உருப்படாமல் போய் விட்டது. அமெரிக்க போன்ற நாடுகள் வெற்றிகரமாக ஜனநாயக வழியில் செல்லும் போது இந்தியா மட்டும் எதிர் திசையில் சென்று கொண்டிருக்கிறது.’ இன்னும் என்னென்னோவோ சொன்னார். நினைவு இல்லை.
இந்த கதைக்கு காரணம், தேர்தல் கமிஷன் என்பது ஒரு நபர் ஆட்டம் கிடையாது. அதை பலவீனப் படுத்த்துவது என்பது எளிதான விஷயம் என்பது சமீப கால நவீன் சாவ்லா வரை நல்ல உதாரணம் உள்ளார்கள். சேசனுக்காவது கொஞ்சம் ரோஷமும் கோபமும் வரும். எந்த கேள்விக்கும் நவீன் சாவ்லா அளிக்கும் பதில்கள் ரொம்பவும் வேடிக்கையானவை. ஒரு வெளி நாட்டிடம் இருந்து நிதி உதவி பெரும் தொண்டு நிறுவனத்தின் தலைவரின் கணவர் இந்த சாவ்லா எனும் போது அச்சம் நியாயமானது தான்.
தேர்தல் ஆணையத்தின் ஐம்பதாவது ஆண்டுப் பொன் விழா நடந்தது. அதில் முக்கியமான செய்தி என்ன? மக்களாட்சி நல்லபடியாக நடக்கத் தேர்தல் கமிசன் தன் பணியைச் செய்வதாகக் கூறியது. இவ்வளவு பெரிய தேசத்தில் தேர்தல் எப்படி நடை பெறுகிறது என்று வாயார புகழ்ந்தது. ஆம் இவ்வளவு பெரிய தேசத்தில் எல்லோரும் தினமும் என்னென்னவோ செய்கிறார்கள். சாப்பிடுவது தூங்குவது மற்றும் பல வேலைகளை மக்கள் செய்கிறார்கள். அதையெல்லாம் யார் பாராட்டுவது? இதில் முக்கியமான அம்சம் என்னவென்றால் தேர்தல் சீர் திருத்தம் அல்லது சுதந்திரமான தேர்தல் என்பது பற்றி வாய் திறக்கவில்லை. சொல்லிக் கொள்ளும்படியாக ஒன்றுமே இல்லை என்பது தெரிந்த விஷயம் தானே. தலைப்புச் செய்தி என்ன தெரியுமா? சோனியாவும் ஜெயலலிதாவும் எப்படி ஹலோ சொல்லிகொண்டார்கள் என்பது தான். ஆனாலும் ஊடகங்கள் கொஞ்சம் கூட இரக்கமில்லாதவர்கள். இங்கே உள்ள முதிய தலைவரை அடிக்கடி கலவரபடுத்துகிறார்கள். எப்படி மின்னணு வாக்கு எந்திரங்கள் முக்கியமானவை என்று கூட விளக்கப் பட வில்லை .
நமக்கு தேர்தல் கமிசன் என்றால் என்ன தெரியும்? வேட்பாளர் யாரவது மரணம் அடைந்தால் தேர்தலை நிறுத்தி வைப்பார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் யாராவது மரணமடைந்தால் இடைத் தேர்தல் நடத்துவார்கள். அப்புறம் என்ன. நீதிமன்றம் யாருக்காவது மறு வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளித்திருந்தால் மீண்டும் பழைய முடிவையே அறிவிப்பார்கள். இங்கே மாநில தேர்தல் கமிசன் என்று ஒரு கட்சி அலுவலகம் உள்ளது. அதில் வெளிப்படையாக தன் ஜாதியைச் சொல்லி தன் செயல்களுக்கு பலம் சேர்க்கிறார் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் தலைவர். உள்ளாட்சித் தேர்தல் என்பதைச் சென்னையில் இருந்து வேடிக்கை பார்த்தவன் என்ற முறையில் சொல்கிறேன் ” கிரிமினல்களின் மொத்த கொக்கரிப்பையும் வெறியாட்டத்தையும் சென்னை வாக்காளர்கள் கண்டார்கள். ரத்தம் சொட்ட சொட்ட ஆட்கள் இங்கும் அங்கும் ஓடினார்கள். அன்றே முடிவாகியிருக்க வேண்டும், அழகிரியா? ஸ்டாலினா? என்று. அந்த தேர்தல் நடந்ததாக மாநில தேர்தல் ஆணயம் விளக்கம் வேறு அளித்துவிட்டது. நீதி பதியும் கேள்விகள் கேட்டதோடு சரி. பின்பு நீதி அமைப்புக்கு எச்சரிக்கை. அப்புறம் அவர்களோடு நல்லுறவை பேணிக் காக்கும் பாங்கு என்று அடுத்தடுத்து நாடகங்கள். ஒரு வேட்பாளர் இரண்டு தொகுதிக்கு மேல் வேட்பு மனு செய்யக் கூடாது என்பது பற்றிக் கூட சட்டம் ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தேர்தல்கள் மின்னணு வாக்கு யந்திரங்களுக்கு மாற்றப்பட்டதால் பெரிய அளவுகளில் முறை கேடு நடக்காது என்று மீண்டும் மீண்டும் நம்ப வைக்கப்பட்டோம்.தேர்தல் என்பது இப்போது மின்னணு யந்திரத்தில் நடத்தப் படுவதை மிகப் பெரிய சாதனையாக சொல்கிறோம். ஆனால் இது மேற்கில் கூட தோல்வி அடைந்த முறை தான். நமது நாட்டில் மின்னணு யந்திரத்தின் பயன்பாட்டைப் பற்றி ஒரு கேள்வியும் எழாமல் அப்படியே ஏற்றுக்கொள்ளப்பட்டது. காரணம் மிகவும் எளிமையாக உள்ளது. அதாவது வாக்கு எண்ணிக்கை எளிதாக முடிந்து ஒரு மூச்சில் முடிவுகளை அறிவித்து விடலாம். மக்கள்த் தொகை அதிகமாக உள்ளதால் வாக்குப் பதிவின் போது நீண்ட நேரம் காத்திருக்கத் தேவை இல்லை. அதே போல காகித்தத்துக்கு ஆகும் செலவு மிச்சம்.
மின்னணு வாக்கு யந்திரங்கள் பற்றி பல சர்ச்சைகள் இருந்தாலும் தேர்தல் கமிசன் தீர்கமாக சொல்லி விட்டது, இப்படித் தான் தேர்தல் நடத்துவோம் என்று.
சீதையின் பேதைமை
தன்னாட்சி அதிகாரம் தேர்தலை நடத்துவதற்கு மட்டும் வழங்கப் பட்டுள்ளதே தவிர தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொள்ள அல்ல என்பதை தேர்தல் கமிசன் உணர்ந்ததாக தெரியவில்லை. தேர்தல் கமிசனின் தொழில் நுட்பக் கண்காணிப்பின் தலைவராக 2006 இல் இருந்த இந்திரேசன் ஒரு தொலைகாட்சி பேட்டியில் ” நாங்கள் சீதையைப் போல தீக் குளிக்க முடியாது” என்று கூறுகிறார். C. ராவ் காசர் பாடா P.V. இந்திரேசன் S.சம்பத் என்று மூன்று நாபர் குழு ஒன்று 1990 இல் அமைக்கப் பட்டது. அவர்கள் தயாரிப்பாளர்கள் அளித்த விளக்க மற்றும் ஒத்திகைகளை நம்பி ஒப்புதல் அளித்தார்கள். 2006 இல் அமைக்கப்பட்ட பாதுகாப்புக் குழுவும் A.K. அகர்வால், D.T. ஷாஹணி மற்றும் P.V. இந்திரேசன் ஆகியோர்களை கொண்டது. இந்த கமிட்டி சில மாற்றங்களை செய்யுமாறும் பாதுகாப்பு மென்பொருளை புதிய தொழில் நுட்பத்துக்கு உட்படுத்துமாறும் சொல்லியது. அதன்படி இரண்டாம் மற்றும் மூன்றாம் தலைமுறை மின்னணு யந்திரங்கள் பயன் படுத்தலாம் என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. இதிலும் நான்கில் ஒரு பங்கு மாற்றத்தை மட்டுமே தேர்தல் கமிசன் செய்தது .
மின்னணு வாக்கு யந்திரங்கள் பற்றிய சந்தேகன்களுக்கு விளக்கம் தேவை இல்லை என்ற விதத்தில் பதில் அளித்து வந்துள்ளது தேர்தல் கமிசன். ஆனால் இதைத் தொடர்ந்து நிறையப் பொது அக்கறை மனுக்கள் உச்ச நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கப் பட்டன. உச்ச நீதிமன்றம் தேர்தல் கமிசனை அணுகுமாறு வழி காட்டி விட்டது. தேர்தல் கமிசனோ தேர்தலை நேர்மையாக நடுத்துவதை விட மின்னணு வாக்கு எந்திரத்தில் நடத்துவது பற்றித் தான் அக்கறை கொண்டது.
இந்த உச்ச நீதிமன்றத்தின் நிலைபாடு என்ன? எப்பொழுதுமே இவ்வளவு பெரிய சர்ச்சை வந்தால் ஒரு தடை ஆணையை வழங்கிவிட்டு, விரைவாக விசாரணையை முடித்து தீர்ப்பு அளிக்க இடம் உண்டு. ஆனால் நீதிமன்றம் என்ன செய்தது? உங்களுடைய எதிரியாக குறிப்பிட்டுள்ள தேர்தல் கமிசனிடமே விளக்கத்தை பெற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியது. யார் மேல் சந்தேகப் படுகிறோமோ அவரே நமக்கு திருப்தியான பதில் தருவார் என்று எதிர்பார்க்க முடியுமா?
இதையும் தாண்டி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி சில தகவல்களை பெற்றது ஹைதிராபாத்தைச் சேர்ந்த நெட் இந்தியா என்ற மென் பொருள் நிறுவனம். Hari K. prashath , J. Alex Haldermany Rop Gonggrijp Scott Wolchoky Eric Wustrowy Arun Kankipati Sai Krishna Sakhamuri Vasavya Yagati ஆகிய தகவல் தொழில் நுட்ப வல்லுனர்களை துணையாக கொண்டு களம் இறங்கியது நெட் இந்தியா நிறுவனம். இரண்டு முறையும் வெவ்வேறு காரணங்களால் இந்த சரி பார்ப்புக்கு பல இடையூறுகளை தந்தது தேர்தல் கமிசன். சில நேரங்களில் கால அவகாசம் தராமலும் இவர்களால் நிரூபிக்க முடியவில்லை என்று வெளியில் வந்து பெருமையாகத் தெரிவித்தது. இதையடுத்து இவர்கள் ஒரு மாதிரி மின்னணு யந்திரத்தைக் கொண்டு செயல் முறைகளை பத்திரிக்கைகளுக்குத் தந்தார்கள். தேர்தல் கமிசன் இந்த நிறுவனம் தன் மீது அவதூறு பரப்புவதாக கூறி விட்டது. ஆனால் தேர்தல் கமிசனும் செயல் முறை விளக்கம் தரும் போது மாதிரி யந்திரத்தைத் தான் பயன் படுத்துகிறது. பின்பு ஒரு உண்மையான வாக்கு யந்திரத்தை சில தேர்தல் அதிகாரிகளின் உதவியோடு பெற்று நிரூபித்தது நெட் இந்தியா.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி தேர்தல் கமிசனிடம் கேள்விகள் மேல் கேள்விகள் கேட்டது நெட் இந்தியா நிறுவனம். பல கேள்விகளுக்கு சுற்றி வளைத்து பதில்கள். சில கேள்விகளுக்கு பாதுகாப்புக் காரணத்தைக் காட்டி பதிலும் தரவில்லை. இறுதியாக தேர்ந்தெடுத்த சில கேள்விகளுக்கு மட்டும்பதில் தந்தது. தேர்தல் கமிசன் செய்த சமாளிப்புகளும் அந்த குறிப்பிட்ட மென் பொருள் நிறுவனத்திற்கும் அதன் சட்ட ஆலோசகர் திரு வி வி ராவுக்கு அளித்துள்ள பதில்களை படித்தால் தேர்தல் கமிசன் வெற்று நம்பிக்கைகளின் அடிப்படையில் செயல் படுகிறது என்பது நமக்குப் புரியும்.
தேர்தல் கமிசனிடம் கேட்கப்பட்ட கேள்விகளையும் பதிலையும் இங்கே தருகிறேன். சுமார் 50 கேள்விகளுக்கு அவர்கள் அளித்துள்ள பதிலை பார்த்து ஊகித்துக் கொள்ளலாம். பல கேள்விகளுக்கு மின்னணு வாக்கு எந்திரங்களின் உற்பத்தியாளர்களை மேற்கோள் காட்டிவிட்டு தேர்தல் கமிசன் கை கழுவியுள்ளது. இதில் முக்கியமான ஒரு பிரச்சனை என்னவென்றால் யந்திரத்தின் பாதுகாப்பு பற்றி கேடப்பட்ட கேள்விகள் அனைத்தையுமே தவிர்த்து வந்துள்ளது. மேலும் உச்ச நீதி மன்றம் வெறும் பரிசோதனைக்கு மட்டுமே வி. வி. ராவிற்கு அனுமதி வழங்கி உள்ளதாகவும் Reverse Engineering செய்ய அனுமதி இல்லை என்றும் தேர்தல் கமிசன் கை விரித்துவிட்டது.
Reverse இன்ஜினியரிங் என்பது வேறு ஒன்றும் இல்லை. அக்கு வேறு ஆணி வேறாக தலை கீழாக பிரித்துப் பார்த்து அதன் மென் பொருள் வடிவத்தை கண்டு அதன் பாதுகாப்புச் சிக்கல்களை அறிந்து கொள்வது என்பது தான். நெட் இந்தியா அந்த எந்திரத்தை கழற்றும் முன்னரே உங்களுக்கு அதைப் பிரித்து வடிவ வரைபடத்தை அறிந்து கொள்ள கோர்ட் அனுமதி இல்லை என்று கூறி விட்டது கமிஷன். அதாவது வழக்கமான அரசாங்க அதிகாரிகளின் சமாளிப்புகள் தான். நீங்கள் இந்த எல்லைக்குள்ளேயே நின்று கொண்டு போட்டி போட வேண்டும் என்ற வாய்ச் சவடால். Remote hacking என்று சொல்லுவது போல தூரத்தில் இருந்து யந்திரத்தின் செயல்பாட்டை மாற்றி அமைக்க முடியுமா? என்று கேட்டது. ஆனால் தேர்தல் வாக்குகளை மோசடியாக பெற நினைக்கும் அரசியல்வாதிகளிடம் இந்த பருப்பு வேகாது என்பது தேர்தல் கமிசனுக்கும் தெரியும். திருடுபவனிடம் இவ்வளவு நீல அகலத்தில் நின்று திருடுங்கள் என்று அறம் போதிக்கும் பேதைமை பற்றி என்ன சொல்ல முடியும்? 2004 க்கு பிறகு தொழில் நுட்பத்தை புதிப்பித்துக் கொள்ளவில்லை என்பதை தேர்தல் கமிசனே ஒப்புக் கொண்டுள்ளது. மேலும் நம்முடைய மின்னணு வாக்கு எந்திரங்கள் பாதுகப்பற்றவை என்று தொழில் நுட்பக் கண்காணிப்புக் குழு சொன்ன பின்பும் அது தேவை இல்லை என்று தன்னிச்சையாக முடிவு எடுத்து கொண்டது. அது சரி பொது மக்களுக்கும் தொழில் நுட்பத்திற்கும் எவ்வளவு தூரம் உள்ளதோ அவ்வளவு தூரம் தேர்தல் கமிசனுக்கும் மக்களுக்கும் உள்ளது.
Electronics Corporation of India (ECIL) and Bharat Electronics Limited நிறுவனங்களிடம் மின்னணு வாக்கு யந்திரத்தை தயரிக்கும் பொறுப்பை கொடுத்துவிட்டது . அவர்களின் பொது மன்றத்திற்கு வரமாட்டார்கள். இந்த நிறுவனங்கள் நமது அமைச்சர் ஆ. ராசாவின் கீழ் பணி புரிபவை. இதனால் அமைச்சருக்கும் வாக்கு எந்திரம் தயாரிக்கும் நிறுவங்களுக்கும் நேரடி தொடர்பு என்று சொல்லிவிட முடியாது தான். Reverse இன்ஜினியரிங் முறைக்கு அனுமதி அளிக்காததற்கு தேர்தல் கமிசன் கூறும் காரணம், தேர்தல் யந்திரங்களின் காப்புரிமை என்பது Electronics Corporation of India (ECIL) and Bharat Electronics Limited (BEL) நிறுவனங்களிடம் உள்ளதால் அவர்கள் தான் அதற்கு அனுமதி தர வேண்டும் என்று சொல்லி விட்டது. வி வி ராவ் அவர்கள் கேட்ட முக்கியமான கேள்விகளை மட்டும் இங்கே பார்க்கலாம். ஐம்பது கேள்விகளில் பல கேள்விகளுக்கு மேலே சொன்ன ஒரே பதில் தான். அதனால் கேள்வியின் முக்கியத்தும் மட்டுமே இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
1 .கேள்வி: ஏன் இந்தியத் தேர்தல்களில் ASIC சிப்புகள் பயன்படுத்தப்படாமல் பொதுவான சிப்புகள் பயன் படுத்தப்படுகின்றன?
பதில் : அப்படி பட்ட சிப்புகள் சந்தையில் கிடைப்பதில்லை. எனவே தேர்தலுக்கு பொருத்தமான பொதுவான சிப்புகள் பயன் படுத்தப்படுகின்றன. (நமது கேள்வி: சந்தையில் அப்படிப்பட்ட சிப்புகள் இருப்பது கூட தெரியாதவர்களா அதிகாரத்தில் உள்ளார்கள்?)
2 . கேள்வி: தேர்தல் கமிசன் சிப்புகளை யாரிடம் வாங்குகிறது? அவற்றை வாங்கிய கணக்குகளை தேர்தல் கமிசன் நிர்வகிக்கிறதா?
பதில்: சிப்புகள் ‘நம்பிகையான‘ பொதுத் துறை நிறுவனங்களிடம் இருந்து வாங்குவதால் அதன் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பை பற்றி அச்சப்படத் தேவை இல்லை. யந்திர உற்பத்தியாளர்களிடம் தான் சிப்புகள் வாங்கிய கணக்கு வழக்குகள் உள்ளன. (தேர்தல் கமிசன் பொறுப்புடன் பதில் அளிக்கும் முக்கியமான கேள்வி)
3 . இந்த மின்னணு யந்திரங்களுக்கு குறியீட்டு மொழியை எழுதுபவர்கள் யார்? அவர்களின் பின் புலம் என்ன?
பதில்: Official SecretsAct அடிப்படையில் ஒப்பந்தம் செய்யப்பட்டு நிரந்தர ஊழியர்கள் இதை எழுதுவதால் இதை பற்றி பேசத் தேவை இல்லை. (பொதுத் துறை ஊழியர்கள் இந்த வேலையை மற்ற கம்பெனிகளுக்கு ஒப்பந்தத்துக்கு விட்டாலும் தெரிய வாய்ப்பில்லை.)
4 . எப்போதாவது மறு வாக்கு எண்ணிக்கை கோரிக்கையின் போது ஒவ்வொரு வாக்கும் அச்சு பதிக்கப் பட்டு சரி பார்க்கப்பட்டதா?
பதில்: கோர்ட் உத்தரவு இல்லாமல் அப்படிச் செய்ய முடியாது. இதுவரை அப்படி எந்த கோர்ட்டும் உத்தரவிட வில்லையாதலால், இந்த கேள்விக்கு பதில் அளிக்கத் தேவை இல்லை. வெறும் முடிவை மட்டுமே அச்சுப் பதிப்பித்து எடுக்கப் படுகிறது. அதே போல சரிபார்ப்புக்கு மட்டும் ஒன்றிரண்டு வாக்குகளை எடுத்து பார்க்கப் படுகிறது. அதே போல சரிபார்ப்புக்கு மட்டும் ஒன்றிரண்டு வாக்குகளை எடுத்து பார்க்கிறோம்.
5 . எந்திர உற்பத்தியாளர்கள் ட்ரோஜன்களை நுழைக்க முடியுமா? இதைப் பற்றி இந்திரேசன் கமிட்டி என்ன பரிந்துரைகளை செய்துள்ளது? ( அதாவது ட்ரோஜன் என்பது வைரஸ் போல மென் பொருள் மொழியை சேதப் படுத்தக் கூடியது)
பதில்: ட்ரோஜன் களை நுழைப்பது என்பது கற்பனையான கேள்வி. இது பற்றி விளக்கத் தேவை இல்லை. இந்திரேசன் கமிட்டி இது பற்றி பரிந்துரை செய்துள்ளது. ஆனால் எங்களுடைய நிர்வாக நடைமுறைகள் சரியாக உள்ளதால் இது பற்றிய கேள்வி எழ வில்லை ( தொழில் நுட்ப ரீதியான கேள்விக்கு நிர்வாக ரீதியான பதில்!).
6 . வாக்கு யந்திரங்களின் பாதுகாப்பு மின்னாளுமைச் ( E -governance ) தரப் பரிந்துரைகளை கையாள்கிறதா? மின்னாளுமைச் ( E -governance ) சட்டத்தை நடை முறைபடுத்தியுள்ளீர்களா?
பதில்: மின்னணு வாக்கு யந்திரம் மின்னாளுமைச் ( E -governance ) சட்டத்தை நடைமுறைப் படுத்த வில்லை. ஆனால் மக்கள் பிரதி நிதிதுவச் சட்டத்தின் அடிப்படையில் பாதுகாக்கப் படுகிறது. (இது தான் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல. மின்னாளுமைச் சட்டம் ஒரு புறம் இருக்கிறது என்பதாவது தெரியுமா? )
7 . கள்ள வாக்கு எந்திரங்களை ஒருவர் தயாரிக்க முடியுமா? அப்படி தயாரித்தால் கண்டுபிடுத்து விட முடியுமா?
பதில்: BEL மற்றும் ECIL கண்டுபிடித்து விடும். நாங்கள் பாதுகாப்பாக வைத்துள்ளதால் அந்தக் கேள்விகள் எழவில்லை.
8 . 2009 நாடாளுமன்றத் தேர்தலில் எவ்வளவு யந்திரங்களில் வாக்குப் பதிவின் போது வாக்களித்த சின்னத்தில் விளக்கு எரியாமல் வேறு சின்னத்தில் விளக்கு எரிந்தது?
பதில்: நூற்றி இருபத்தியிரண்டு. (அத்தொகுதிகளின் முடிவுகள் எப்படி இருந்திருக்கும்.)
9 . காணாமல் போன வாக்கு எந்திரங்களின் எண்ணிக்கை எவ்வளவு? எவ்வளவு மீட்கப் பட்டுள்ளன? எத்தனை எந்திரங்கள் சேதப் படுத்தப் பட்டன?
பதில்: 2009 இல் எழுபத்தியொரு யந்திரங்கள் காணமல் போயின. ஒன்று கூட மீட்கப் பட வில்லை. 225 யந்திரங்கள் சேதப் படுத்தப் பட்டன.
தொழில் நுட்பக் கேள்விகள் எல்லாவற்றிற்கும் பாதுகாப்பு காரணங்களை காட்டி தேர்தல் கமிசன் பதில் சொல்ல மறுத்துள்ளது. உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் அனுமதி இல்லாமலோ கோர்ட்டின் உத்தரவு இல்லாமலோ தகவல்களை தர இயலாது என்று கூறப்பட்டது.
இனி எங்கெல்லாம் வாக்கு யந்திரங்களை தவறாகப் பயன் படுத்தலாம் என்று விரிவாகப் பார்ப்போம்.
2010ஏப்ரல் மாதம் கூட தேர்தல் கமிசன் தலைவர் தொழில் நுட்ப மேம்பாடு தேவை இல்லை. எல்லாம் சரியாகத் தான் உள்ளது என்று சாதிக்கிறார். விவாதிக்கத் தயாரில்லாத மன நிலையில் தான் அவருடைய பேச்சு உள்ளது.
மூன்று கட்டங்களில் யந்திரத்தில் வாக்குகளையும் தேர்தல் முடிவுகளையும் மாற்றி அமைக்க முடியும். ஒன்று தயாரிப்பின் போது மென்பொருள் மொழியிலேயே ஒரு தர்க்க கணக்கை மாற்றி எழுதி விட முடியும். இரண்டு போலியான மென் மற்றும் பரு உதிரிப் பாகங்களை நுழைத்துவிடுவது. மூன்று வாக்கு எண்ணிக்கைக்கு முன் ரேடியோ மற்றும் மொபைல் போன்களின் சமிக்ஞ்கைகளை கொண்டு தேர்தல் முடிவை மாற்றி அமைப்பது.
அதாவது ஒரு குறிப்பிட்ட வரிசை என் கொண்ட சின்னத்துக்கு ஒரு வாக்கு விழுந்தால் நான்கு வாகுகள் விழுந்ததாக மாற்றி எழுதி விடுவது. இது கண்டறிய முடியாத உள்ளடி வேலை. இந்த உள்ளடி வேலைகள் பற்றி யந்திரங்களை பரிசோதிக்கும் குழுக்களுக்கே தெரியாமல் கூட செய்து விடலாம்.
தேர்தல் கமிசன் பயன் படுத்தியுள்ள 1,378,352 யந்திரங்களில் 930,352 இரண்டாம் தலை முறை யந்திரங்களை பயன் படுத்தியுள்ளது. இது பாதகாப்பு குறைபாட்டின் முக்கிய அம்சம். ஏனென்றால் 2003 தொழில் நுட்பம் இன்று செல்லுபடியாகாது. இதை விட கொடுமை முதல் தலைமுறை, அதாவது , 1989 வாக்கில் தயாரிக்கப்பட்ட முதல் தலை முறை யந்திரங்கள் மாநில தேர்தல்களிலும் உள்ளாட்சி தேர்தல்களிலும் பயன்படுத்தப் படுகிறது. அவற்றில் பாதுகாப்பு என்பதற்கு கிஞ்சித்தும் இடம் கிடையாது. இந்த லட்சணத்தில் இதனுடைய தயாரிப்பு ஒப்பந்தத்தின் விலை ஒரு யந்திரத்திற்குகிட்டத்தட்ட பத்தாயிரம் ரூபாய் வரை செலவாகிறது. இது பல மேலை நாட்டு நவீன யந்திரங்களை விட அதிக விலை. இப்படிச் செய்யப்படும் யந்திரங்களை இரண்டு தெர்தல்களுக்க் மேல் பயன் படுத்த முடியாது. அதாவது அதே தொழில் நுட்பம்,ஆனால் யந்திர உற்பத்தி பெருகியபடியே இருக்கும். ஊழல் தனிக் கதை.
மின்னணு வாக்கு எந்திரத்தை பொறுத்த அளவில் இரண்டு பிரிவுகள் உண்டு. ஒன்று மையப் பிரிவு. தேர்தல் பணியாளர்களும் அதிகாரிகளும் பயன்படுத்துவது. இந்த மையப் பிரிவில் எல்லா வாகுகளையும் சேகரித்து பாது காத்து வைக்கும் பிரிவு. அடுத்தாக வாக்களிக்கும் பிரிவு. வாக்களர்கள் தங்கள் வாக்கை செலுத்தும் பிரிவும் உள்ளது. பார்க்கப் படம். [K1]
ஒரு வாக்கு யந்திரம் என்பது பதினாறு வேட்பாளர்களை கொண்டதாக உள்ளது. மேலும் பதினாறு பதினாறாக அறுபத்திநான்கு வேட்பாளர்கள் வரை நான்கு யந்திரங்களை ஒரு மைய பிரிவுக்கு தொடர்பு கொடுக்க முடியும். அறுபத்தி நாலுக்கு மேல் வேட்பாளர்கள் இருந்தால் கண்டிப்பாக மின்னணு வாக்கு யந்திரத்தை பயன் படுத்த முடியாது. மையப் பிரிவை ஒரு பிளாஸ்டிக் சீலை திறந்து விட்டு வாக்குப் பதிவை தொடங்கும். பின்பு, வாக்குப் பதிவு முடிந்தவுடன் மையப் பிரிவில் CLOSE பொத்தனை அழுத்தி தேர்தல் முடிந்ததாக அறிவிப்பார். பின்பு இந்த மையப் பிரிவு மட்டும் வாக்கு எண்ணிக்கையின் போது வழங்கப் பட்டு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். மையப் பிரிவின் திரையில் ஒவ்வொரு வேட்பாளரும் வாங்கிய வாக்குகளைக் காட்டும். பின்பு தேர்தல் பணியாளர்கள் அவர்கள் கைப்பட கூட்டல் செய்து முடிவை அறிவிப்பார்கள்.
அடுத்ததாக, ஒரு தொகுதியில் ஒரு யந்திரத்தினை கைப்பற்றி விட்டாலே ( நமது அரசாங்க ஊழியர்களில் அல்லது காவல் துறையில், மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் ஒருவர் கூட கருப்பு ஆடு இல்லை என்று நம்பினால் இப்படி நடக்காது என்று கொள்ளலாம்). வாக்குகள் பதிவாகி எண்ணிக்கைக்கு காத்திருக்கும் ஒரு யந்திரத்தை கையில் எடுத்துச் செல்லகூடிய ஒரே ஒரு மின் உதிரி பாகத்தின் உதவியுடன் மாற்றி அமைக்க முடியும். இது தேர்தல் அதிகாரிக்குக் கூட தெரிய வாய்ப்பில்லாத திருட்டு. கிட்டத்தட்ட 14 லட்சம் வாக்கு யந்திரங்களில் ஒன்றை கைப்பற்றி விட்டாலே போதுமானது, மற்றவற்றின் வடிவத்தை அறிந்து விட முடியும். ஆனால் தேர்தல் கமிசனே கிட்டத்தட்ட முன்னூறு வாக்கு எந்திரங்களை பறி கொடுத்துள்ளது. இந்த குறிப்பிட்ட நெட் இந்தியா நிறுவனமும் ஒரு வாக்கு எதிரத்தை பெயர் தெரிவிக்க விரும்பாத ஒருவரிடமிருந்து பெற்றுள்ளது.
முழு மாவட்டத்தின் வாக்குகளை மின்னணு வாக்கு எந்திரங்களில் மாற்ற முடியும் . ஏனென்றால், ஒரு களவாடப் பட்ட வாக்கு யந்திரம் மாற்று சங்கேத மொழியில் எழுதப்பட்டு நுழைக்கப்பட்டால் கூட ஒரு வாக்குப் பெற்ற ஒருவருக்கு நான்கு வாக்குகள் விழுந்ததாக எழுதி முடிவில் மாற்றம் செய்ய முடியும். அது மட்டுமல்லாமல், மறு வாக்கு எண்ணிக்கை செய்ய இயலாத அளவில் தான் இந்த எந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், வாக்குச் சாவடி கைப்பற்றபட்டால் ஒரு வாக்குச் சாவடி வாக்குகளை மட்டுமே மாற்றி அமைக்க முடியும். ஆனால் மின்னணு வாக்கு யந்திரத்தில் மைய செயலி இருப்பதால் தொகுதியின் அனைத்து வாக்குகளையும் மாற்றி அமைக்க முடியும்.
1. ஒரு போலியான முடிவு காட்டும் திரையை மைய பிரிவின் உள்ளே பொருத்திவிட்டால் யாருக்கும் சந்தேகம் வராது. அப்படிச் செய்தால் மொத்த வாக்குகளையும் [K2]<http://www.google.com/transliterate/indic/Tamil> மாற்றி அமைக்க முடியும். இதை வடிவமைக்க ஒரு வாரம் போதுமானது. ஒரே யந்திரத்தில் நுழைத்து விட்டால் அப்புறம் புளு டூத் மற்றும் ரேடியோ சிக்னல்களை கொண்டு எல்லா யந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை முடிவையும் மாற்ற முடியும். அப்படி சமிக்ஞைகளை அனுப்பிவிட்டால் எந்த வேட்பாளர் எவ்வளவு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று ஆருடம் கூட செய்து பிழைக்கலாம். ( என்ன ஏதாவது தலைவர்களின் கணக்குகள் மனதில் வந்து போகிறதா?)
2. இந்த சமிக்ஞைகளை ஒரு மொபைல் [K3]<http://www.google.com/transliterate/indic/Tamil> போன் உதவியோடு செய்து முடித்துவிட முடியும்.
3. [K4]<http://www.google.com/transliterate/indic/Tamil> அதே போல இன்னொரு பருப்பொருள் தாக்குதலையும் செய்யலாம். அதாவது, படத்தில் உள்ளபடி உள்ள EEPROM [K5]<http://www.google.com/transliterate/indic/Tamil> பதிவைச் சேமிக்கும் சிப்புகளில் ஒரு மாற்றத்தை செய்ய முடியும். சட்டைப் பைக்குள் எடுத்துச் செல்லக்கூடிய ஒரு சாதனம். இது இரண்டு வேலைகளைச் செய்யும். ஒன்று வாக்குகளை திருட முடியும், மற்றொன்று, யாருக்கு வாக்களித்துள்ளார்கள் என்ற ரகசியத்தை கண்டு பிடித்துவிட முடியும். இதைப் பயன்படுத்தி நீங்கள் இன்னும் சில வேலைகளைச் செய்ய முடியும். ஒரு வாக்குப் பதிவாக சாதாரணமாக ஐந்து நிமிடங்கள் ஆகும். அதே போல ஒரு யந்திரத்தில் இவ்வளவு தான் வாக்கு பதிவு செய்ய முடியும் என்று இருக்கும். அதையெல்லாம் முறியடித்து நீங்கள் வேண்டிய வேட்பாளருக்கு பதிவான வாக்குகளின் விகிதாச்சாரத்தை பொறுத்து வாக்களித்துக் கொள்ள முடியும்.
4. Renesas, என்ற ஜப்பானிய கம்பெனி தான் இதன் மூலச் சங்கேத மொழியை எழுதிக் கொடுக்கின்றது.ஒரு மின்னணு பொறியாளர் இதன் சங்கேத மொழியின் மற்றும் வரைபடத்தின் பிரதியை எடுத்து வெளியே யாருக்கும் விற்றாலும் தெரியாது. இது கண்டு பிடிக்க பின்னோக்கி போக வேண்டும். மிகவும் கஷ்டமான உளவு மற்றும் தொழில் நுட்பம் தெரிந்தவரால் மட்டுமே யார் இதை விற்றார் என்று கண்டு பிடிக்க முடியும். இந்த திருட்டைச் செய்வது எளிது ஒரு வாரத்தில் கூடச் செய்ததற்கான உதாரணங்கள் உள்ளன. இதே மாதிரி மென் பொருள் செய்யும் நிறுவனங்களை தொடர்பு கொண்டால் செய்து தர தயாராக சந்தையில் நிறையப் பேர் உலாவுகின்றனர். யந்திரங்களை சேமித்து வைக்கும் இடத்தில் கூட நுழைந்து மாற்று சங்கேத மொழியை நுழைத்துவிட முடியும். இதெல்லாம் சாத்தியம் தான என்று கேட்டால் வாக்கு யந்திரங்களை சேமிக்கும் இடங்கள் பற்றி தெரிந்து கொள்வது நலம். கோனார்க் சனல் தொழிற்சாலையில் கூட தேர்தல் கமிசன் இவற்றை “பாதுகாப்பாக” வைத்திருந்ததது.
5. இதே மாதிரி மின் சுற்று பலகை , வாக்கு பதிவு யந்திரப் பிரிவு போன்றவற்றை அப்படியே அச்சுப் போல செய்து நுழைத்து விட முடியும்.
6. பரிசோதனைத் தேர்தல் பற்றி ‘தானா மெச்சிக்குமாம் தவிட்டுக் கொழுக்கட்டை என்ற கதையாக தேர்தல கமிசன் கருத்துக்களை கூறி வருகிறது. அதில் இந்த மாதிரி போலி வாக்குப் பதிவைசெய்து முடித்த வேளையில் ரேடியோ சமிக்ஞைகளை கொண்டு இயக்குமுன் தெரிய வராது என்பது கூட தேர்தல் கமிசனுக்கு தெரியவில்லை.
7. ஒரு முறை சங்கேத மொழியை எழுதிவிட்டால் அதை மாற்றி எழுத முடியாத வண்ணத்தில் உள்ளதாக தேர்தல் கமிசன் சொல்கிறது. ஆனால் தயாரிப்பாளர்களான ECIL மற்றும் BEL ஆகியவற்றின் அதிகாரிகள் சரி பார்க்கக் கூட முடியாது. Auguste Kerckhoffs என்ற ராணுவ ரகசிய எழுத்தாளர் சொல்லுவது போல, It must not be required to be secret, and it must be able to fall into the hands of the enemy without inconvenience “. ஆனால் இவர்கள் சொல்லுவது போல அப்படி உடைக்க முடியாத ஒன்றும் இல்லை. Reverse இன்ஜினியரிங் மூலம் நுண்ணோக்கி மூலம் மென் பொருள் சங்கேத மொழியை படித்துவிட முடியும். நினைவில் கொள்க 2009 இல் காணாமல் போன யந்திரங்களின் எண்ணிக்கை 71 .
8. வாக்குகளை கைப்பற்ற நினைப்பவர், வேட்பாளார் வரிசை கொடுக்கப் பட்ட பின்பு அல்லது வாக்கு எண்ணிக்கை முடிந்த பின்பு, தான் சமிக்ஞைகள் மூலம் கைப்பற்றுவார். அது வரை அவர் கையில் இருப்பது யந்திரத்தின் வடிவம் மற்றும் சங்கேத மொழி மற்றும் அதற்கு தேவையாக அவர் தயாரித்து வைத்திருக்கும் கிளிப் ஆன் மற்றும் Secret Knocks போன்ற சமிக்ஞைகளுடன் விளையாடும் ஒரு மின்னணுக் கருவி மட்டுமே. இது ஒன்றும் சிரமமான தொழில் நுட்பமே அல்ல. இது பல கட்டங்களில் பயன் படுத்தப் பட்டு நடைமுறையில் உள்ளது தான்.
9. மென் பொருள் தாக்கப் படுவதைபற்றி நிறைய விளக்கங்களுடன் எழுத முடியும். ஆனால் அதற்கு நம் அறிவாளிகள் எப்போதும் மேற்கு தொழில் நுட்பத்தால் முன்னேறியுள்ளது என்று துதி பாட ஆரம்பிப்பார்கள். இங்கே மேற்கின் லட்சணத்தையும் பார்போம்.
மேற்கின் ஜனநாயகக் காவலின் தோல்வி
மத்திய கிழக்கு நாடுகளில் ஜனநாயக உரிமை இல்லை என்பதாலேயே அவர்கள் பிற்போக்கான வாழ்க்கை வாழ்வதாக BBC முதல் அனைத்து ஊடக நிறுவனங்களும் திரும்பத் திரும்பச் சொல்கின்றன. தேர்தல் முறை வந்தால் இந்த நாடுகள் எல்லாம் இசுலாமிய அடிப்படை வாதத்தில் இருந்து விடுதலை பெற்று தொழில் மற்றும் கல்வி போன்றவற்றில் சிறந்து விளங்கக் கூடும் என்று ஆருடம் சொல்லி வருகின்றன. அதன் மூலம் மத அடிப்படைவாதத்தில் இருந்து விலகி பெரும் கலாச்சாரத்திற்குள் வந்து விடும் என்று உலகத்திற்கு நம்பிக்கை ஊட்டி வந்துள்ளது மேற்கு மற்றும் அமெரிக்க ஊடக நிறுவனங்கள். அதாவது தீவிரவாத இயல்பைக் குறைக்க ஜனநாயக மருத்துவம் என்பது அவர்கள் போதிப்பது. நம்மைப் போல உள்ள அமைதி வழியில் நம்பிக்கை உள்ள அனைவருக்கும் உகந்த விஷயம் தான். ஒரு நாட்டின் மக்கள் அதிகாரத்தை அவர்களே முடிவு செய்வார்களாயின் அந்நியச் சதி அது இது என்று பிதற்றத் தேவை இல்லை.
சில மத்திய கிழக்கு நாடுகளில் வெள்ளைக்காரர்களின் பினாமி அரசாங்கம் அமையவே தேர்தல்கள் வழி வகுத்துள்ளன என்பது பல இஸ்லாமிய நாடுகளில் குற்றச்சாட்டாக உள்ளது. அதாவது ஜனநாயகத்தை வளைத்து தன் போக்கிற்கு ஒரு அரசாங்க அதிகாரியை நியமித்துக் கொள்வது என்பது அதில் உள்ள சூழ்ச்சி என்று கூறப்படுகிறது. லெபனான் போன்ற நாடுகளில் தேர்தல் முடிவுகள் வந்தவுடன் வெடித்த கலவரங்களின் வெளிப்பாடு இத்தகையது தான். இராக்கில் எப்பொழுது அமெரிக்கா விரும்பும் மக்களாட்சி அமைகிறதோ அப்பொழுது தேர்தல் இருக்கும் , போர் இருக்காது என்ற முடிவுக்கு வரலாம். மக்கள் தேர்தலில் வாக்களித்து ஒருவரை வெற்றி பெற செய்திருந்தாலும் முடிவுகள் ஒரு மாதிரியாக அமைக்க அமெரிக்க உளவு அமைப்பின் தலையீடு இருக்கும். இதில் இப்பொழுது நவீன யந்திரத்தின் மூலம் தொலை தூரத்தில் இருந்தே மோசடி செய்ய முடியும் என்ற மிகப் பெரிய சாதக அம்சம் பல பெரிய நாடுகளுக்கும் அவற்றின் விற்பனை பிரமுகர்களுக்கும் மிகுந்த சாதகமாக உள்ளதாக வெளியுறவுத் துறை வல்லுனர்கள் குறிப்பிடுகிறார்கள்.
தென்னமரிக்க நாடுகளில் தேர்தல் அதுவும் மின்னணு எந்திரம் வந்தததற்கு பிறகு நடந்த தேர்தல்கள் பற்றி நிறைய செய்திகள் வந்தன. அங்கே அரசாங்கம் அமைக்கும் கலையே, முதலில் தேர்தல் முடிவுகளை கண்டபடி மாற்றி அமைப்பது தான். இதில் கொஞ்சம் விழிப்படைந்த பிரேசில் போன்ற நாடுகள் தேர்தல் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு வெளிப்படையாக வழங்க ஆரம்பித்தன.
வேடிக்கையான இரண்டு சம்பவங்கள் . ஒன்று ஜார்ஜ் புஷ் இரண்டாம் முறை அதிபராக இருந்த பொழுது வாக்குகளுக்கு பணப் பட்டுவாடாவை நூதனமாக யாருக்கும் சந்தேகம் வராதவாறு செய்தார். மூத்த குடி மக்களுக்கு வரி கட்டியதற்காக இலவசமாக முன்னூறு முதல் ஐந்நூறு டாலர் வரை வழங்கப் பட்டது. அதாவது சரியாக தேர்தல் நெருங்கும் காலத்தில் செலவு செய்ய மக்களுக்கு இனாம் வழங்கப் பட்டது. இது ஏதோ மக்களின் வாங்கும் சக்தியை அதிகப் படுத்த மற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தை உற்சாகப் படுத்த என்றெல்லாம் பொருளாதார விளக்கம் தரப் பட்டது. அதற்குப் பின் தான் நாம் கண் கூடாக பார்த்தோமே, அமெரிக்கா எவ்வாறு பொருளாதார நெருக்கடியில் சிக்கி சின்னாபின்னமாகியது என்பதை. அதாவது மூத்த குடிமக்களுக்கு கொடுக்கும் அளவிற்கு அவர்களிடம் பணம் ஒன்றும் கொட்டிக் கிடக்கவில்லை.
இரண்டு அல் கோர் தான் இரண்டாம் தேர்தலில் வென்றார் என்பதை அதிக தகவல்களுடன் வெளியிட்ட புத்தகங்கள் நிறைய எழுதி தள்ளப் பட்டன. குறிப்பாக Stupid White Men என்ற புத்தகம், மற்றும் The Betrayal of America: How the Supreme Court Undermined the Constitution and Chose Our President (2001), Supreme Injustice: How the High Court Hijacked Election 2000 , What Went Wrong In Ohio: The Conyers Report On The 2004 Presidential Election (2005), Fooled Again (2005) போன்ற புத்தகங்கள் மிகவும் பிரபலமானவை. அந்த புத்தககங்களில் எவ்வாறு மின்னணு வாகு யந்திரத்தை மோசடியாக பயன்படுத்தி புஷ் வென்றார் என்று விளக்கப்பட்டுள்ளது. புளோரிடா மாகாணத்தில் புஷ் வெறும் 1784 வாக்ககுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் என்று அறிவிக்கப்பட்டது. அல் கோர் மறு வாக்கு எண்ணிக்கை கோரியபோது ஒரு மாசினில் மட்டும் எண்ணிக்கை பாக்கி இருந்த போது வெறும் 327 வாகுகள் மட்டுமே வித்தியாசத்தில் இருந்தார். ஆனால் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் தலையிட்டு மறு வாக்கு எண்ணிக்கையை தடை செய்து உத்தரவு பிறப்பித்தது. புஷ் வெற்றி பெற்றார். இன்னும் பல மாகாணங்களில் மறு வாக்கு எண்ணிக்கை கோரப் பட்டிருந்த நிலையில் இந்த தடை உத்தரவுடன் அமெரிக்க சுப்ரீம் கோர்ட் வாக்கு மறு எண்ணிக்கையை தடை செய்து ஒரு கட்ட பஞ்சாயத்துப் பண்ணித் தான் ஜார்ஜ் புஷ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப் பட்டது. புளோரிடா மாகாணத் மறு வாக்கு எண்ணிக்கை என்று இணையத்தில் தேடினால் கொட்டி கிடக்கிறது தகவல்கள். அதாவது 44 % வாக்குகளைப் பெற்ற புஷ் வெற்றி பெற்றதாகவும் 47 % வாக்குகள் பெற்ற அல் கோர் தோற்றதாகவும் அறிவிக்கப் பட்டது என்று நிறைய பத்திரிகைகள் எழுதின. இந்த தேர்தல் முடிவு என்பது கிட்டத்தட்ட விலைக்கு வாங்கப் பட்டது போன்றே விமர்சிக்கப் பட்டது. மேலும், மக்களின் நகைப்புக்கு இடேயேயும் புஷ் தனது நகைச்சுவை நாடகங்களை நிறுத்த வில்லை. புஷ் ஒரு வாக்குச் சாவடியில் உள்ள வாக்களர்களின் எண்ணிக்கையை விட அதிகமான வாகுகள் வாங்கியிருந்தார் என்ற வேடிக்கையும் நடந்தேறியது. . இதில் டாலாஸ் மாகாணத்தில் செத்துப்போன 6 000, பேரும் புஷ்ஷுக்கு வாக்களித்துள்ளார்கள். இதை அமெரிக்க அரசாங்கம் வெறும் எண்ணிக்கைப் பிழை தான் என்று மழுப்பியது. ஆதாரம். http://www.texaswatchdog.org/2008/10/dead-voters-cast-ballots-in-dallas-county/ இவ்வாறு தேர்தல் சித்து விளையாட்டுக்களைச் செய்யக் காரணமாக இருந்தது மின்னணு வாக்கு எந்திரங்கள் தான். இந்த தேர்தல் முடிவை ஒப்புக்கொண்டுவிட்டலும், உடனடியாக அமெரிக்க சுப்ரீம் கோர்ட் மின்னணு வாக்கு எந்திரங்களை பயன் படுத்துவதை தடை செய்துள்ளது. தொழில் நுட்பத்தை முதலாவதாக சைத்தானாகத் தான் பயன் படுத்துவோம் என்று ஹிரோஷிமா நாகசாகி முதல் இன்று வரை அமெரிக்கா கொள்கை உறுதியுடன் இருந்து வந்துள்ளது.
இதே போல கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தல் முடிந்த நாளன்று தெரிவிக்கப்பட்ட கணக்கை விட 23 ஆயிரம் வாக்குகள் கூடுதலாக எண்ணப்பட்டதாக வை.கோ கூறிய குற்றச்சாட்டை அப்படியே குழி தோண்டி புதைத்தன பத்திரிக்கைகள். இவர்கள் தான் தேர்தல் கட்டப் பஞ்சாயத்தில் டவாளிகள். ஆனால் வை.கோ பதினைந்தாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோற்றார். மக்கள் வாக்களிப்பது முக்கியமில்லை என்றே நம்புகின்றன போலும் . இதே போல 1960 வாக்கில் திருச்செந்தூர் தேர்தலில் தோல்வி முகத்தில் இருந்த திரு சிவசாமி என்ற தி . மு. க வேட்பாளர் வெற்றிபெறும் வரை எண்ண வேண்டும் என்று ஒரு வாய் மொழி உத்தரவின் படி வெற்றி பெற வைக்கப்பட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மத்திய அமைச்சர் சிதம்பரத்தின் வெற்றி என்பது பற்றிய சர்ச்சைக்கு அவர் ஏதாவது லண்டனில் இருந்து உதாரணங்கள் காட்டக் கூடும். நமக்குத் தமிழ் மட்டும் தெரிந்த தற்குறிகள் என்ற தாழ்வுணர்ச்சி தொடர வேண்டும். அப்பொழுது தான் லண்டனில் இருந்தும் ஹார்வர்டில் இருந்தும் இறக்குமதியாகும் வேட்பாளர்களின் கணக்குகள் புரியாது.
ஐரோப்பிய நாடுகள் மின்னணு வாக்கு பதிவுத் தடை
நெதர்லாந்து முதலில் மின்னணு வாக்கு யந்திரத்தை தடை செய்தது. Nedap ES3B என்ற தொழில் நுட்பத்தின் சிக்கல்களை விளக்கமாக வெளியிட்டது நெதர்லாந்து அரசாங்கம். ஜெர்மனியின் உச்ச நீதி மன்றம் எக்காரணத்தைக் கொண்டும் பயன்படுத்தக் கூடாது என்று மின்னணு வாக்கு யந்திரத்தை தடை செய்தது. இதைத் தொடர்ந்து இத்தாலி பிரிட்டன் போன்ற நாடுகளும் தடை செய்தன. குறிப்பாக நெதர்லாந்தில் தடை செய்யக் காரணமாக இருந்தது தொழில் நுட்ப சித்து விளையாட்டுக்கள் தான். எப்படியெல்லாம் மின்னணு வாக்கு எந்திரத்தை களவாடி முடிவுகளை மற்ற முடியும் என்று நிரூபிக்கப் பட்டுள்ளது. “ On May 16, 2008 the Dutch government decided that elections in the Netherlands will be held using paper ballots and red pencil only. A proposal to develop a new generation of voting computers was rejected.”இது தான் அந்தக் கோர்ட்டின் தீர்ப்பு.
ஜெர்மனியின் உச்ச நீதிமன்றம் இன்னும் ஒருபடி மேலே போய் நஷ்ட ஈடும் வழங்க உத்தரவிட்டு மின்னணு வாக்கு யந்திரத்தைத் தடை செய்தது. இவ்வளவு தீர்க்கமாக தீர்ப்பளித்ததன் காரணம் மிகவும் எளிமையானது. பாதுகாப்பற்ற மென்பொருள் தொழில் நுட்பக் குளறுபடிகள்.ஆனால் இங்குள்ள இந்திரேசன் கமிட்டி ஐரோப்ப தொழில் நுட்பத்தை விட நமது தொழில் நுட்பம் பாதுகாப்பானது என்கிறார்.
சில உதிரித் தகவல்கள்:
ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ள எல்லோரும் ஒப்புக்கொள்ளும் ஒரு இடம், மக்கள் எப்படிப்பட்ட ஆட்சியை விரும்பித் தேர்ந்து எடுத்தாலும் அதை ஏற்றுக் கொள்வதே. மேலே குறிப்பிட்ட குழுக்கள் அதை ஒரு போதும் அனுமதிப்பது இல்லை. தமிழகத்தை பொறுத்தவரையில் எப்போதும் தேர்தல்கள் வெற்றி அறிவித்தவுடன் அப்படியே மறக்கடிக்கப் படும். 2009 பாராளுமன்றத் தேர்தல் பல காரணங்களுக்காக மறக்க முடியாதது.
1 . வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பணம். ஒவ்வொரு வாக்குக்கும் குறைந்தபட்சம் 500௫ கிடைத்தது . அதிக பட்சமாக 2500 .
2 . பல இடங்களில் வாக்குப் பதிவு அதிகமாக நடந்தது . சுமார் எண்பத்தி எட்டு சத வீதம் கூட சில தொகுதிகளில் வாக்குப் பதிவு நடந்தது. கூட்டணி கட்சி பலத்தை தாண்டி தி மு க வெற்றி பெற்றது.
3 . சில இடங்களில் வாக்களித்த சின்னங்களில் விளக்கு எரியாமல் ஆளுங் கட்சியின் சின்னத்தில் விளக்கு எரிந்தது.
மூன்றாவது பிரச்சனையில் மட்டும் கவனம் செலுத்துவோம். இது மக்கள் விரும்பி ஏற்றுக் கொண்ட அரசாங்கமா அல்லது மக்கள் மீது திணிக்கப் பட்ட அரசாங்கமா என்பதைப் பற்றி யாரும் வாய் திறக்க வில்லை. அதற்கு காரணம் பொது மக்களுக்கு ஏன் அறிவு ஜீவிகளுக்குக் கூட விளங்காத மின்னணு வாகு யந்திர திணிப்பு.
தடாலடியான எண்ணிக்கையில் வாக்குகள் பதிவாவது பற்றி மக்கள் மற்றும் எதிர் கட்சிகள் கண்டு கொள்வதே இல்லை. மக்கள் எந்த தேர்தலாலும் எந்த நன்மையும் பெறப் போவதில்லை என்பது வேறு விஷயம். எதிர்க் கட்சிகளுக்கு என்ன ஆயிற்று. நாடாளுமன்றத்தில் தனக்கு இல்லாத பலத்தை காங்கிரஸ் நிருபிக்க கொட்டிய பணத்தின் துளிகளைத் தான் மூட்டை மூட்டையாக ஒருவர் கொட்டினாரே. எதிர் கட்சிகள் நமுட்டுச் சிரிப்பு சிரித்ததோடு சரி. நாங்களும் இருக்கோம், நாளை நமதே என்பது நம்பிக்கையாக இருக்குமோ?
புதிய பொருளாதாரம் என்பது புதிய வர்க்கம் ஒன்றை உருவாகியுள்ளது. அதாவது, மார்க்சியர்கள் சொல்வது போல ஏழை பணக்காரர் என்ற வர்க்கத்துக்கு மேலாக தரகர் வர்க்கம் என்று ஒன்று உருவாகியுள்ளது. இந்த தரகர் வர்க்கம் அதிகாரத்தில் உள்ள அணைத்து தரப்பினருடனும் குழைந்து வேண்டியதை செய்து கொடுத்து காய்களை நகர்த்திக் கொள்ளும். இது அமெரிக்காவில் அறிமுகமான பெரிய வணிக நிறுவனங்களின் பேர முறையில் ஒரு பெரும் வெற்றி. இவர்கள் அரசியலையும் வணிகத்தையும் இணைக்கும் மாபெரும் சாகசத்தைச் செய்கிறார்கள். இந்த திரை மறைவு காய் நகர்த்தல்கள் சர்வதேச அங்கீகாரம் கிடைக்க ஆரம்பித்த பின் இந்த தரகர்கள் பார்வை நம் மேல் படாதா என்று ஏங்காத அரசியல் வாதிகளே இல்லை. இந்த தரகர்கள் எந்த குதிரை வெல்ல வேண்டும் என்பதை பல எண்கள் மற்றும் குறியீடுகளை உருவாகுகிறார்கள். அதாவது நிறைய வாக்குறுதிகளை வழங்கி இவர்களை கவர்ந்தால் பல சமயங்களில் எளிதாக வென்று விடலாம். இப்படி எல்லா தளங்களிலும் மற்றும் அடுக்குகளிலும் தரகர்கள் உண்டு. அவர்கள் அதிகமும் சிவில் நடைமுறைகளை வளைப்பதில் கை தேர்ந்தவர்கள். இவர்களை பகைத்துக் கொள்வது அபாயகரமானது என்று எல்லோருக்கும் தெரியும். அமர் சிங்க் ஹில்லாரி கிளிண்டனுடன் நின்று புகைப் படம் எடுத்துக் கொள்பவர். பெரிய இடத்து வம்பை யாரும் வளர்த்துக் கொள்வதில்லை. எதிர் கால ஊழல் குற்றச் சாட்டுகளில் இருந்து வெளியே வர இவர்கள் உதவக்கூடும் என்பது தான் மௌனத்தின் அர்த்தம்.
தரகர்கள் தேர்தல் முடிவை தீர்மானிக்க முடியுமா? அவர்கள் எப்படி தேர்தலில் வேலை செய்கிறார்கள்? என்ன முடிவுகளை அவர்கள் மாற்றுகிறார்கள்?
தேர்தலில் நேரடி பங்கு என்பது வெளிப்படையாக தெரியாத ஒன்று தான். ஆனால், தேர்தல் மின்னணு எந்திர தயாரிப்பு என்பது ஒப்பந்தங்களை முடிவு செய்வது, ஊடகங்களை முடுக்கி விடுவது, மற்றும் பொருளாதார மற்றும் நல்லிணக்கம், பயங்கரவாதம், மதவாதம், வரிச் சலுகைகள, கடன் சலுகைகள், விலை வாசி பிரச்சனைகள், பிரச்சனை இல்லாத தேர்தல்கள் என்று பல கோஷங்களை வடிவமைப்பது வரை இவர்கள் வேலை தான். அமெரிக்காவில் இந்த முறை குடியரசுக் கட்சி தோல்வியில் இவர்கள் பங்கு மகத்தானது என்று அனைவரும் குறிப்பிடுகிறார்கள். தேர்தலில் காற்று மழை ஐநூறு ரூபாய் நோட்டு, பணத் தட்டுப்பாடு என்பதெல்லாம் இந்த மாதிரியான அறிவு ஜீவிகளின் கண்டு பிடிப்பே. அதெல்லாம் இருக்கட்டும். இப்பொழுது வந்துள்ள மின்னணு வாகு எந்திரத்தை வளைத்து ஓட்டுக்களை தேவையான வேட்பாளருக்கு அளிக்கக் கூடிய சாத்தியம் என்ன என்பது தான் இன்றுள்ள நடைமுறை சார்ந்த கேள்வி. இங்கே சோனியா காந்தி எங்கிருந்து வந்தார், நவீன் சாவ்லா என்ன விதத்தில் உதவினார் எப்படி இவர்கள் அரசியல் காய் நகர்த்துகிறார்கள் என்பதெல்லாம் வேறு விஷயம்.
தேசிய ஒற்றுமை கருதி மக்கள் காங்கிரசுக்கு வாக்களித்ததாக ஊடகங்கள் கொண்டாடின. கலைஞரின் ராஜ தந்திரம் வென்றது என்றும் கூறப்பட்டது . ஸ்டாலின் சிலம்பரசனை விட அழகாக விரல் வித்தை செய்கிறார் என்றார்கள். கனிமொழின் கவிதை நடைகூடக் காரணம் என்று சொன்னார்கள். இலங்கைத் தமிழர் பிரச்சனையின் பாதிப்பு இல்லையென்றார்கள். ராகுல் காந்தி நயன் தாராவை விட கவர்ச்சியாக இருப்பதால் தான் வெற்றி என்றார்கள். கம்யூனிஸ்ட்டுகளின் ராஜ தந்திரத்தால் பா ஜ க மதவாதம் தோற்கடிக்கப் பட்டது என்றும் கொண்டாடின பத்திரிக்கைகள். அத்வானி மன்மோஹனை முதுகெலும்பற்ற பிரதமர் என்று சொன்னதும் மக்கள் பிரதமருக்காக அனுதாபப் பட்டார்கள் என்றும் கூட சொன்னார்கள். மக்கள் பிரச்சனைகள் அற்ற விவாதிக்கத் தேவை இல்லாத ஒரு எளிய தேர்தல் என்று கூட வருணித்தன.சோனியாவின் மூளைக்கும் செயல் திறனுக்கும் கிடைத்த வெற்றி, விவசாயிகளின் பிரச்சனைகளை வெற்றிகரமாக சமாளித்த்தற்காக கிடைத்த வெற்றி, மாநில கட்சிகளுக்கிடேயயான மோதிலானால் கிடைத்த வெற்றி, ஊழல் வலையில் சில கட்சிகளை சிக்க வைத்து மிரட்டி பணிய வைத்ததால் கிடைத்த வெற்றி என்று என்னென்னவோ காரணங்கள் சொல்லப்பட்டது.தமிழ் நாட்டில் தலைவர்கள் சுற்றுப் பயணம் செய்யக் கூட அஞ்சிய காங்கிரஸ் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி? ஒரே ஒரு பொது கூடத்தில் மட்டுமே பங்கேற்ற கருணாநிதியின் கட்சி வெற்றி. அவர் சார்பாக ஐநூறு ரூபாய் நோட்டுக்கள் சுற்றுப் பயணம் செய்ததது என்று சொல்கிறார்கள். ஓரத்திலே நின்று ஓட்டுக் கேட்ட மன்மோஹனுக்கும் வெற்றி. ஊடக ஆதரவால் கிடைத்த வெற்றி என்று கூட சொல்ல ஆரம்பித்தார்கள். இதில் எந்தக் காரணம் பிடித்திருக்கிறதோ அதைக் கொண்டு சுய சமாதானம் செய்து கொள்ளாலாம்.
தமிழக தேர்தல் முடிவுகளில் பலரும் கேள்வி கேட்க முடியாதவாறு பணமும் ஊடக முடக்கமும் பங்காற்றின.கொஞ்சம் கூட சந்தேகம் வராதவாறு பார்த்துக் கொள்ளலாம். அகில இந்திய அளவில் சிறிய கட்சிகளின் எழுச்சி அடக்கப் பட்டது. அதை விட நில உடமைச் சமூகங்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட கட்சிகளின் வாக்கு வங்கிகள் நம்ப முடியாத அளவுக்கு சரிந்தன. குறிப்பாக பஞ்சாபில் அக்காலி தளம், பீகாரில் லாலு மற்றும் நிதீசின் கட்சிகள் , உத்தரப் பிரதேசத்தில் முலாயம், ஆந்திராவில் சந்திர பாபு நாயுடுவின் கட்சி, தமிழகத்தில் ஜெயலலிதாவின் கட்சி மற்றும் ராமதாசின் கட்சி போன்றவை எப்போதும் பெரும் வாக்குளில் இருந்து வெகுவாக குறைத்து மதிப்பிடப் பட்டன. இதன் சர்வதேசப் பின்னணி என்னவென்று தெரியாது. வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையோ தேசிய எழுச்சி சமயங்களை விட அதிகமாக காட்டப் பட்டது. விஜயகாந்த், சிரஞ்சீவி, ராஜ் தாக்கரே போன்றோர்களின் பங்கு என்ன, அவர்கள் என்ன மாதிரியான முடிவுகளை விளைவிக்க என்ன மாதிரியான கூலிகளை பெற்றுக் கொள்கிறார்கள் என்பதெல்லாம் நமக்குத் தெரியாது. இந்த கட்சிகளுக்கெல்லாம் மக்களிடம் உள்ள உண்மையான செல்வாக்கு என்பதெல்லாம் வாக்குச் சீட்டு முறை வந்தால் மட்டுமே தெளிவடையும்.
தேர்தல் முடிவு வருவதற்கு மூன்று நாட்களுக்கு முன் தினமலர் நாளிதழில் பிரதமர் தனது எதிர்கால அமைச்சர்கள் யார் என்று ஆலோசனை செய்ய ஆரம்பித்தார் என்று ஒரு செய்தி வெளியானது. அதாவது அவருக்கு தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தெரிந்துவிட்டது என்று செய்தி வெளியிட்டார்கள். இந்த செய்தி இந்தியாவில் வெளியாகும் ஒரு வாரத்திற்கு முன்பே அமெரிக்க பத்திரிகைகள் வெளியிட்டன. அமெரிக்க வெளியுறவுத் தூதர் தேர்தல் முடிவடையும் முன்பு சிரஞ்சீவி, அத்வானி மற்றும் சில அரசியல் தலைவர்களைச் சந்தித்துச் சென்றார். சன் டிவியில் தேர்தல் வாக்கு எண்ணிக்கையை பற்றி செய்தி வந்து கொண்டே இருந்தது. மாலை மூன்றரை மணி வரை வாக்குப் பதிவைப் பற்றி வந்த செய்தி என்னவென்றால், மத்திய சென்னை தொகுதயில் 33 சதவீதமும், வட சென்னையில் 31 .5 % மும் தென் சென்னையில் 34 .5 % மும் வாக்குகள் பதிவாகியிருந்தன என்று அனைத்து செய்தியாளர்களுக்கும் முன்னிலையில் நேரடியாக பேட்டி அளித்தார் மாநில தேர்தல் கமிசனர். ஆனால் மாலை 4 .30 மணிக்கு செய்தி ஒளிபரப்பில் ‘ வெயில் தணிந்ததால் மக்கள் உற்ச்சாகமாக வாக்களித்ததாக‘ செய்தி காட்டப் பட்டது. அதிக வாக்கு எண்ணிக்கையை நம்ப வைக்க ஒரு முன்னோட்டம் செய்து கொள்ளும் தந்திரம். இதைத் தொடர்ந்து மாலை வாக்குப் பதிவு முடிந்த நிலையில் 74 % மொத்த வாக்குப் பதிவு நடை பெற்றதாக அறிவிக்கப் பட்டது. அதாவது ஒன்றரை மணி நேரத்தில் கிட்டத்தட்ட சென்னையில் மட்டும் மனசு மாறிய சுமார் 50 % வாக்காளர்கள் வாக்களித்துவிட்டதாக அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் பட்டது. அதுவும் வெயில் போய் விட்டதால் நாட்டைப்பற்றிக் கவலைப் பட்ட சென்னை வாக்காளர்கள்!
சிக்கல் இப்படி இருக்க ஊடகங்களின் நன்றி விசுவாசம் இப்படி இருக்க பிழைக்குமா ஜனநாயகம்? நீங்கள் தேர்தலுக்கு ஐநூறு கொடுத்து மக்களை பலவீனப் படுத்தினால் சீனா போன்ற நாடுகள் ஆயுதங்களைக் கொடுத்து மாவோயிஸ்ட்டுகளை பலப் படுத்தும். அப்பாவி மக்கள் நாங்கள் என்ன பாவம் செய்தோம். இந்தியா குடியரசு நாடாக இருக்க வேண்டுமா இல்லையா என்று தரகர்கள் முடிவு செய்யக் கூடாது. நம்பிக்கையோடு நாம் தான் முயற்சி எடுக்க வேண்டும். இல்லையேல் நீதிமன்றங்களும், இந்த அமைப்புகளையும் அசைத்துப் பார்த்துள்ள இன்றைய புதிய பொருளாதாரத்தில் நாம் எல்லோரும் தோற்றவர்களாகி விடுவோம்.
———-
References:
Minister Gormley announces Government decision to end electronic voting and counting project. 23/04/09 http://www.environ.ie/en/LocalGovernment/Voting/News/MainBody,20056,en.htm
A.K.Agarwala, D.T.Sahani and P.V. Indiresan. Report of the expert committee for evaluation of the upgraded electronic voting machine (EVM), Sep. 2006,
A.J.Feldman, J.A. Halderman, and E.W. Felten. Security analysis of the Diebold AccuVote-TSvoting machine. In Proc.USENIX/Accurate Electronic Vioring Technology Workshop (EVT ’07). 2007 <http://www.usenix.org/event/evt07/tech/full_papers/ryan/ryan.pdf>
CNN-IBN. Interview with PV Indiresan http://ibnlive.in.com/news/evms-rigged-poll-panel-challenges-doubters/97488-3.html
A. U. de Haes. Dutch Government bans electronic voting. IDG News Service, May 2008
Election COmmission of India. Handbook for candidates, http://www.eci.nic.in/eci_main/ElectoralLaws/HandBooks/Handbook_for_candidates.pdf 2009
Election Commission of India. The commission’s reply to Sh. V.V.Rao dated 29th March 2010. eci.nic.in/eci_main/recent/reply__sh.VVRao.pdf Mar.2010
Betrayal of America: How the Supreme Court Undermined the Constitution and Chose our President Supreme Injustice: How the high Court Hijacked Election 2000
- What went wrong in Ohio: The Conyers Report on the 2004 Presidential Elction (2005)
- Fooled Again [Hardcover] Mark Crispin Miller (Author) The Real Case for Electoral Reform http://www.amazon.com/Fooled-Again-Mark-Crispin-Miller/dp/0465045790